திருச்சியில் பழுதடைந்த பாலத்தின் மீது காத்திருக்கும் வாகனங்கள் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 104

திருச்சி கரூர் சாலையில் அமைந்துள்ளது குடமுருட்டி பாலம்! சுமார் 100 ஆண்டுகள் பழமையான பாலமாக இருந்து வருகிறது. திருச்சியில் இருந்து தென் மாவட்டங்களான கரூர், கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமாக இருந்து வருகிறது.இந்த குடமுருட்டி பாலத்தின் அருகில் இருக்கும் சோதனை சாவடியில் தினம்தோறும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் வரிசைகட்டி அந்த பழமையான குடமுருட்டி பாலத்தின் மேல் அதிக நேரம் இருக்கின்றது.

 

குறுகிய அந்தப் பாலத்திற்கு அருகில் சோதனை சாவடியில் அமைந்துள்ளதால் வாகனம் ஓட்டுவோர் அந்த இடத்தில் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
குடமுருட்டி பாலத்திற்கு மாற்று பாலம் கட்டபடுவதாக அறிவிக்கப் பட்ட நிலையில் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சம்பந்தபட்ட துறை அலுவலர்கள், அவ்விடத்தினை ஆய்வு செய்து பாலத்திற்க்கு பாதிப்பு ஏற்படாமலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என சாலை பயனீட்டாளர்கள் நல அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!