லஞ்சம் வாங்கிய துணை சர்வே வட்ட ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

0 341
CM

திருச்சி, நவ.25 திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் திருச்சி குண்டூரில் தான் வாங்கி வீட்டுமனைகளுக்கு தனிப்பட்டா கேட்டு, 16.10.2007 ஆம் தேதி திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள சர்வே செக்சனில் துணை சர்வே வட்ட ஆய்வாளரை கணேசமூர்த்தியை அணுகியுள்ளார். சக்கரவர்த்தின் வீட்டுமனை சர்வே ரிப்போட்டை தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க கணேச மூர்த்தி ரூ. 1000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்கரவர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆலோசனையின் பேரில் சக்கரவர்த்தி கணேசமூர்த்தியிடம் லஞ்சம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திரந்த லஞ்ச ஒழிப்புதுறையினர் கணேசமூர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்க சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். இதில் கணேசமூர்த்திக்கு ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7 கீழ் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சட்டப்பிரிவு 13(2) உடன் இணைந்த13(1)(ஈ) ன் கீழ் 3 வருடம் கடுங்கால் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் சிறப்பு வழக்குரைஞராக சுரேஷ்குமார் ஆஜரானார்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!