மண்ணச்சநல்லூரில் சமுதாய வளைகாப்பு விழா
திருச்சி, பிப்.25 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள சமுதாய கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், தட்டு, மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பொருட்களுடன் சீர்வரிசை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார், ச.கண்ணனூர் பேரூராட்சி தலைவர் ப.சரவணன், மாவட்ட திட்ட அலுவலர் நித்யா, மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் கண்ணன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி மற்றும் கர்ப்பிணி பெண்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.