மணப்பாறை அருகே சாலையில் கார் கவிழ்ந்து விபத்து
திருச்சி, ஏப். 9 மணப்பாறை அருகே டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த கார். அதிர்ஷ்ட வசமாக லேசான காயங்களுடன் தப்பிய 6 பேர்.
கோயம்புத்தூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மரவனூர் என்ற இடத்தில் செல்லும் போது காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த 10 தடுப்புக் கட்டைகளை உடைத்துக் கொண்டு 30 அடி தூரம் சென்று இணைப்பு சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்ட வசமாக காரில் பயணம் செய்த 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.