அன்பிலில் குளத்தில் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

0 34
voc

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோவில் எதிரே அமைந்துள்ள குளத்தில் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

லால்குடி அருகே பெருவெள்ளநல்லூர் மேல உடையார் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி 45 வயதான ஈஸ்வரி. இந்த தம்பதியினருக்கு சரண்யா, தர்ஷினி, தனஸ்ரீ என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரிக்கு அம்மை நோய் வந்திருந்தது. அம்மை நோய் குணமாக கடந்த 16 நாட்களாக அன்பில் மாரியம்மன் கோயிலில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியல் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதமாக குளத்தில் தவறி விழுந்தவர் நீரில் மூழ்கில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!