அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்ட விழா

0 90
trichymail

 

திருச்சி மாவட்டம்
லால்குடி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்ட விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. பிரம்மனுக்கு அன்பினால் பெருமாள் உபதேசம் செய்ததால் இவ்வூருக்கு அன்பில் எனப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

national admission
click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

இக்கோவில் 108 வைணவ திவ்யதேச திருத்தலங்களில் 4-வது இடத்தில் உள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பெற்றது சிறப்பு ஆகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றதாக கோவில் குறிப்புகளில் காணப்படுகிறது.
காலப்போக்கில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் கோவில் தேர், மதில் சுவர்கள் சிதிலமடைந்து தேரோட்டம் நடைபெறவில்லை என இவ்வூர் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.50 லட்சத்தில் 33 அடி அகலமும், 27 அடி உயரமும், 4 டன் எடை கொண்ட புதிய தேர் செய்யப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்ட விழா கடந்த 25 ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வெரு நாளும் சுவாமி காலையில் பல்லக்கிலும் இரவில் ஹம்ச ,யானை, குதிரை, சேஷ உள்ளிட்ட, வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்ட விழா இன்று நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மேலும் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்தனர்.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.