பள்ளி மாணவிக்கு கவிச்சுடர் விருது

கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி மாணவி கவிதை, பட்டிமன்றம், பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவிக்கு கவிச்சுடர் விருது வழங்கப்பட்டது. உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது கவிதையை அரங்கேற்றி உலக சாதனை படைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி சு. அ. யாழினி இணையதளம் வழியாக கவிதை, பட்டிமன்றம், பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்று சான்றிதழ்களை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரியில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கவிச்சுடர் விருதும், உலக சாதனை நிகழ்ச்சியிலும் பங்கேற்று சான்றிதழையும் பெற்றுள்ளார்.
உலக சாதனை படைத்து பள்ளிக்கும் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி யாழினியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்