முசிறி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்

முசிறி நகராட்சியின் சார்பாக தூய்மை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம், மற்றும் வணிக நிறுவனங்கள், மருத்துவமனை, கிளினிக் இவற்றை சிறப்பாக தூய்மையாக வைத்திருந்தவர்களுக்கும்,தூய்மை பணியாளர்களுக்கும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்தி பேசினார்.
அப்போது ஆய்வாளர் மலையப்பன், மேற்பார்வையாளர் சையது முகமது ,களப் பணி உதவியாளர் தனுஷ்கோடி, லயன்ஸ் கிளப் ரகுநாதன், அலுவலக பணியாளர்கள் பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.