துறையூர் பெருமாள் மலையில் சித்திரை தேரோட்டம்: பக்தர்கள் தவிப்பு

0 135
trichymail

துறையூர் பெருமாள் மலையில் சித்திரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு ! அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் தவிப்பு.

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தென்திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுகின்ற பெருமாள் மலையில் நடைபெற்று வரும் வைகாசிமாத பிரமோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.. பிரம்மோற்சவத்தின் 9-ம் நாள் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.முன்னதாக அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் மேஷ லக்னத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சர்வ அலங்காரத்துடன் தம்பதி சமேதராக திருத்தேரில் எழுந்தருளினார். துறையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் , “கோவிந்தா , கோவிந்தா ” என பக்தி கோஷங்கள் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், இல்லாததால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். மேலும் திருக்கோயில் சார்பில் நடைபெறுகின்ற அன்னதான் திட்டம் முக்கிய நாளான இன்று நடைபெறவில்லை. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தேரோட்டத்தை பற்றி துறையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையாக விளம்பர சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்யாததால் பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. மேலும் கிரிவலப் பாதை பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக இருந்ததால் தேரை முன்புறமாக கொண்டு செல்லக் கூடிய உந்துக்கட்டை திடீரென முறிந்து விழுந்ததால் தேரோட்டம் சுமார் 1மணி நேரம் தடைபட்டது.. இதனால் பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் காத்திருந்தனர்

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.