காவிரியில் புதிய பாலம் கட்டுமானப் பணி: ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல்
திருச்சி, நவ.14 திருச்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 106 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
சத்திரம் பேருந்து நிலையத்தில் பாலம் ஏறும் முகப்பு பகுதியில் இடது புறத்தில் காவிரி கரையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 80 செண்ட் இடத்தை ஆக்கிரமித்து 26 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை அப்புறப்படுத்தினால் மட்டுமே காவிரி பாலத்தினை அடுத்த கட்டப்பணியை முன்னெடுக்க முடியும் என்ற நிலையில் நேற்று வீடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் சென்றபோது, குடியிருப்போர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் பாலம் பணி நடைபெறுவதால் அந்த இடத்திற்கு பதிலாக மேக்குடி பகுதியில் 9 மாதங்களுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை அந்த இடத்தை அளந்து கொடுக்கவில்லை இதனால் அவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது சரியாக அளந்து கொடுக்காத காரணத்தாலும் உடனடியாக இடத்தை காலி செய்ய கூறுவதாலும் பொதுமக்கள் என்ன செய்வது என தெரியாமல் பரிதாப நிலையில் உள்ளனர்
இதன் கண்டித்து காவிரி பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர் மறியலின் போது ஒருவர் தீக்குளிக்க முயன்றார் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து போலீசார் வாகனங்களை வேறு வழியில் திருப்பி விட்டனர். போராட்டமானது 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது போராட்டத்தின் போது மழை குறுக்கிட்டது மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதன் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது அவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் தொடர்ந்து நவம்பர் 30 வரை அவர்களை வெளியேற்றும் பணி நடைபெறாது என உறுதி அளித்தனர் மேலும் அதற்குள் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்ததன் காரணமாக பொதுமக்கள் கலைந்து சென்றனர்