திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்… அமைச்சர் நேரு பங்கேற்பு!..

மார்ச்.26. திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் முசிறி தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது.
திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும் நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது கழகத்திற்கான உறுப்பினர்கள் சேர்த்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல், கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்து கட்சியினர் மத்தியில் விரிவாகப் பேசினார்.
அப்போது பூத் கமிட்டி அமைத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவதற்கு கட்சியினர் இப்போது இருந்தே தீவிரமாக பாடுபட வேண்டுமென்றும், தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதை செயல்படுத்தும் நோக்கில் கழகத்தில் புதிய தொண்டர்களாக ஒரு கோடி பேரை சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் கே என் நேரு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துறையூர் ஸ்டாலின் குமார், மண்ணச்சநல்லூர் கதிரவன்,
மாணவரணி மாநில துணை செயலாளர் கோகுல், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர செயலாளர் கிளை கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.