திருச்சி விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்து சேர்ந்தது.
இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு ஆண் பையன் சோதனை செய்தபோது அவர் கொண்டு வந்த உடைமையில் இருந்த ஆங்கிள் கிரைண்டர் இயந்திரத்தில் உருளை வடிவிலான 348 கிராம் எடையுள்ள 21லட்சத்து 27ஆயிரத்து672 ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேறும் பகுதியில் உள்ள கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 49கிராம் எடையுள்ள தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2 லட்சத்து 99 ஆயிரத்து 586 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.