திருச்சி என்.ஐ.டி.யில் வேலை -வாய்ப்பு

0 315
voc

 

திருச்சி என்ஐடியில் (NIT) வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (NIT) காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow மற்றும், Technical Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

national admission
click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

காலிப்பணியிடங்கள்:

இந்தப் பணிக்கு மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது

Senior Research Fellow – 2 பணியிடங்கள்

Junior Research Fellow – 2 பணியிடங்கள்

Technical Assistant – 1 பணியிடம்

ஊதிய விவரம்:

Senior Research Fellow – ரூ.35,000

Junior Research Fellow – ரூ.31,000

Technical Assistant – ரூ. 21,600

கல்வித் தகுதி:

Senior Research Fellow -மெட்டல்ஜிகல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்/ மெட்டீரியல்ஸ் சயின்ஸ்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ உற்பத்தி தொழில்நுட்பம்/ உற்பத்திப் பொறியியலில் M.Tech.

Junior Research Fellow – மெட்டல்ஜிகல் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்/ மெட்டீரியல்ஸ் சயின்ஸ்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ உற்பத்தி தொழில்நுட்பம்/ உற்பத்திப் பொறியியல் ஆகியவற்றில் ME/ M.Tech

Technical Assistant – BE/ B.Tech in Mechanical/ Metallurgical and Material Science, M.Sc in Chemistry/ Physics/ Materials Science, ME/ M.Tech in Metalurgical and Materials Engineering/ Materials Science/ Mechanical Engineering/ Manufacturing Technology/ Production Technology/ Production

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இதற்கான நேர்காணல் அடுத்த மாதம் (நவம்பர்) 11ஆம் தேதி நடக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் இருப்பவர்கள் https://nitt.edu/home/other/jobs/MME-CMPDI_Project_staff_advt_OCT2022-v2/ என்ற தளத்தில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Dr. S.P.குமரேஷ் பாபு, பேராசிரியர், MME துறை, NIT, திருச்சி-15 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!