லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா தேரோட்டம் நடைபெற்றது
திருச்சி மாவட்டம்லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

click the image to chat on whatsapp
அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் திருத்தவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. இக் கோயில் எழு முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும் இத் திருத்தவத்துறை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
இக்கோயிலின் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது இதில் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, ஆகிய தெய்வங்களுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி பல்லக்கில் கோவில் உள் பிரகாரங்கள் வழியாக சுற்றி வந்தது. பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
முன்னதாக சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு பால், தேன், பன்னீர், சந்தானம், பழங்கள், இளநீர் உள்ளிட்ட 11 க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர் இந்த நிகழ்ச்சியில் லால்குடி, நன்னிமங்கலம், சாத்தமங்கலம், மும்முடிசோழமங்கலம., இடையாற்றுமங்கலம், திருமங்கலம், ஆங்கரை, மணக்கால் உள்ளிட்ட 10 திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.இதனைத் தொடர்ந்து இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை குருக்கள் மகாதேவன் மற்றும் சிவாச்சாரியார்கள் கோயில் செயல் அலுவலர் நித்தியா செய்திருந்தனர்
