சமயபுரம் மாரியம்மன் கோவிலில் டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6 ம் தேதி தொடங்குகிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற 6 ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.
அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும்.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. அன்று இரவு உற்சவர் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மன் கேடயத்தில் புறப்படாகி தேருக்கு அருகில் எழுந்துருளுவார் .பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைடுத்து அம்மன் தேரோடும் வீதி வழியாக திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்தனர்.
