தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு
திருச்சி,நவ. 23 திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சரும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் மனசாட்சியாகவும் வாழ்ந்து மறைந்த முரசொலி மாறனின் 19ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் திருச்சி கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் எம். மதிவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன் வண்ணை அரங்கநாதன், சபியுல்லா, மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
