அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்
திருச்சி, மே 2. திருச்சி ஸ்ரீரங்கத்தில் 76 ஆண்டு காலமாக அரசு உதவி பெறும் பள்ளியாக பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த நிலையில் 2024 ஆண்டிற்கான சேர்க்கையானது நடைபெற்று வரும் நிலையில்.
ஆறாம் வகுப்பு ஆங்கில வழியில் சேர்ப்பதற்காக இன்று காலை 10மணிக்கு விண்ணப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதற்காக நேற்று இரவு 8 மணி முதல் சுமார் 14 மணி நேரத்திற்கு மேலாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் கை குழந்தையுடன் காத்திருந்து விண்ணப்பத்தை பெற்றோர்கள் பெற்றுச் சென்றனர்.
ஆங்கில வழியில் பயில 50 நபர்களுக்கு சேர்க்கை நடைபெறும். அதுவும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவிகளுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெற இருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருந்து விண்ணப்பத்தை பெற்று சென்றனர்.
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் அதிகமாக இருப்பதால், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் வகுப்பறையை அதிகப்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தினால் சுற்றுவட்டார பகுதியில் இருக்கின்ற ஏழை எளிய மாணவர்கள் பெரும் பயன் பெறுவார்கள் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். தமிழ் வழியில் பயில பள்ளி சேர்க்கையில் இந்த எண்ணிக்கை கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.