தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி

தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி
தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி குறித்த சிறப்பு பயிற்சி தென்னூர் நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் விமலா தலைமை வகித்தார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகாஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
தேர்வுக் காலத்தில் மன அழுத்தமும் பதட்டமும் பொதுவான உணர்வுகளாக இருந்தாலும், அவற்றை யோகா தியான பயிற்சி மூலம் மனதை ஒருமுகப்படுத்தலாம். தேர்வு பருவத்தில் , பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்துடன் போராடுகிறார்கள் . இது மாணவர்களின் படிப்பிலும் தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ளும் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேர்வு காலங்களில் மன அழுத்தமும் பதட்டமும் பொதுவான உணர்வுகளாக இருந்தாலும், அவை அதிகமாக இருப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளன.