தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

0 223
voc

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சி  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 22.07.2022 வெள்ளிக்கிழமையன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ(All Trades), டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு (B.E. also) முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம்.

மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது

அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு(Resume) மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

national admission
click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் 22.07.2022 வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!