சமயபுரம் திருக்கோவில் நடை இன்று மாலை 3.30 மணிக்கு சாத்தப்படும்

திருச்சி, பிப். 4 சமயபுரம் திருக்கோவில் நடை இன்று மாலை 3.30க்கு சாத்தப்படும் என்று கோவில் இணையர் ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் இன்று (பிப்.4)மாலை 3.00 மணியளவில் கொள்ளிடம் வட திருக்காவேரியில் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் இன்று (பிப்.4) மாலை 3.30க்கு திருக்கோவில் நடைசாத்தப்பட்டு, நாளை (பிப்.5) காலை 5.30 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு அம்மாள் சேவை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.