மகள் இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த தந்தை மாயம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆனந்திமேட்டைச் சேர்ந்த ஆனந்தன் மகன் 40 வயதான ஞானவேல். இவனுடைய மனைவி 35 வயதான புவனேஸ்வரி. இந்த தம்பதியின் மகள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.மகள் இறந்ததால் ஞானவேல் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்தார் போலீசார் மாயமான வரை தீவிரமாக தேடி வருகின்றனர்.