விமானத்திலேயே உயிரிழந்த திருச்சி வந்த பயணி!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு
இன்று காலை 8.15 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தது. இந்த விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நீர்பழனி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் வேல்முருகன் (36) என்பவர் விமானத்தில் அமர்ந்தவாறு இருந்துள்ளார்.
உடனடியாக விமான நிலைய மருத்துவ நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்த விமானத்திற்குள் வந்த மருத்துவர் அவரை சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் வேல் முருகனின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

click the image to chat on whatsapp