திருப்பிரம்பீஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிகள் தொடங்க பூமிபூஜை

0 80
voc

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருப்பிரம்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக பணி நடைபெற்று 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் மற்றும் சிவனடியார்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2011 ஆம் ஆண்டு இக்கோவில் திருப்பணி தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களால் பாலாலயம் செய்யப்பட்டது.
பாலாலயம் செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இக்கோவிலை தொல்லியல்துறை பரிந்துரையின் பேரில் இந்து சமய அறநிலையத் துறையில் வரைபட ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் 5 பேர் கொண்ட குழு அமைத்து புராதன கோவில்களை பழமை மாறாமல் கட்டி கும்பாபிஷேகம் செய்ய உத்தரவிட்டதன் பேரில் கோவில் வரைபடங்கள், புகைப்படங்கள், தொல்லியல் துறை ஒப்புதல், மாவட்ட அறநிலையத் துறையின் அனுமதி, பெற்று சென்னை உயர்நீதிமன்ற கமிட்டிக்கு அனுப்பி வைத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட திருக்கோயில் பணிகள் தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்து அறநிலை துறை பொறியாளர்கள். தலைமைப் பொறியாளர்கள். அறநிலை துறை அதிகாரிகள். கோவிலை பார்வையிட்டனர் இதனைத்தொடர்ந்து கமிட்டியின் உத்தரவின்பேரில் இக்கோவிலின் தள நிலவரம், வரைபடம் கொடுக்கப்பட்டு கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத் துறையினர் சுற்றுச்சுவர் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டிலும் திருக்கோவில் அர்த்தமண்டபம் சுவாமி சன்னதி அம்பாள் சன்னதிக்கு ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டிலும் புதுப்பிக்க ஒப்புதல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது திருப்பணி தொடங்க பூமி பூஜை முகூர்த்தக்கால் நடும் இன்று காலை தொடங்கி கணபதி ஹோமம், ஹஸ்திர ஹோமம், விநாயகர் அபிஷேகம் முதலிய பூஜைகளுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பூமி பூஜை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதற்கான பணிகளை செயல்அலுவலர் கார்த்திகா, திருக்கோவில் அர்ச்சகர் விஸ்வநாதன் குருக்கள், ஸ்தபதி கண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!