கலையரங்கம் திருமண மண்பட வளாகத்தில் விஷப்பாம்புகள் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 93
udhay

திருச்சி, ஜூன் 15  திருச்சி கலையரங்கம் திருமண மண்பட வளாகத்தில் உள்ள முட்புதர்களில் கொடிய விஷப்பாம்புகள் உள்ளன. எனவே முட்புதர்களை சீரமைக்க அரசுத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கலையரங்கம் திருமணம் மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டப வளாகத்தில் திருச்சி பிளஸ் கிளப், குழந்தைகள் நல அலுவலகம்
உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதிலும் திருமண நாட்களில் இந்த திருமண மண்டபத்திற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இவர்களின் வாகனங்கள் அருகிலுள்ள மைதானத்தில் நிறுத்துவது வழக்கம். மேலும் இந்த முட்புதர் அருகே பிரஸ் கிளப் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் முட்புதரில் இன்று மதியம் இரண்டு விஷப்பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஜோடி சேர்ந்து கொண்டிருந்ததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்தனர்.

udhay
click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

குறிப்பாக இப்பகுதியில் முட்புதர்கள் இருப்பதால் விஷ பாம்புகள் விஷ பூச்சிகள் உள்ளிட்டவைகளின் கூடாரமாக உள்ளது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக இந்த குப்பை கூலங்களை அகற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.