பொன்மலைப்பட்டியில் குழாய் உடைந்ததால் வீணாகும் குடிநீர் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 17
Stalin trichy visit

திருச்சி, நவ.13  திருச்சி  பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஜெயில்காவலர் குடியிருப்பு நுழைவாயில் அருகில் குடிநீர் பைப் ஒன்று உடைந்ததால், நல்ல தண்ணீர் பெருமளவில் சாக்கடையில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

“கடந்த சில நாட்களாக தண்ணீர் பைப் உடைந்து, குடிநீர் சாக்கடையில் கலக்கிறது. இதனால் சாலைப் பகுதியில் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. குடிநீர் வீணாகி சாக்கடை நீரில் கலப்பதால், தண்ணீரின் தரமும் பாதிக்கப்படுகிறது. மேலும் குடிநீர் வீணாகி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது”

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாவதைத் தடுக்குமாறு மக்கள் சக்தி இயக்கம்  மாநில பொருளாளர்,  கே.சி. நீலமேகம், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.