கஞ்சா – புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது
திருச்சி ஆக 18 திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்து உட்பட்ட திருச்சி – திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது ராம்ஜி நகரை சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார், அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் கஞ்சா விற்க வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த மூதாட்டியை கைது செய்து அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர் இதே போன்று பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் கஞ்சா விற்றுக கொண்டிருந்த. முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் (வயது 23) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
புகையிலைப் பொருட்களை விற்க முயன்ற வாலிபர் கைது
திருச்சி கே.கே. நகர் காஜா மலை காலனி ரேசன் கடை அருகில் உள்ள பஸ் நிறுத்த பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக கேகே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோசலராமன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார், சந்தேகத் திடமாக இருந்த அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 36)என்பது தெரிய வந்தது, மேலும் அவரிடம் போலீசார் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது தெரிய வந்தது, இதையடுத்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயராமனை கைது செய்துள்ளனர்.