போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது
திருச்சி, அக்.31 திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பூக்கொல்லை பகுதியில் போதை மாத்திரை விற்றதாக உறையூர் பாளையம் பஜாரை சேர்ந்த முகமது ஸைப்(வயது 28), வரகனேரி சந்தானபுரம் பகுதி சேர்ந்த அசன் அலி ( வயது27 ) ஆகிய இரண்டு ரவுடிகள் மற்றும் மகாலட்சுமிநகரை சேர்ந்த ஹஜிபுதின் (வயது25) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 190 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
 
			