ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் சாலைகள் சீரமைக்க அனுமதி வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை

0 170
Stalin trichy visit

திருச்சி, அக்.13 திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் பொய்யாமொழி ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொகுதிக்குட்பட்ட ரயில்வேக்கு சொந்தமான பகுதிகளில் சாலைகளை சீரமைக்கவும், தேவையான இடங்களில் புதிய சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் பொதுமக்கள் வசதிக்காக அமைக்க உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
திருச்சி மாநகராட்சி வார்டு எண் 44க்கு உட்பட்ட கணேசபுரம், அண்ணாநகர் மெயின் ரோடு மற்றும் வார்டு எண் 36க்கு உட்பட்ட தெரு நேருஜி ஆகிய இடங்களில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணிக்காகவும், ஜி-கார்னர் பகுதி யில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க வேண்டியது அவசியமாகும். இந்த தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருக்கும் பகுதி ரயில்வேக்கு சொந்தமானது என்பதால் உடனே இதற்குரிய பணிகளை மேற்கொள்ள ரயில்வே துறை உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.
மேலும், வார்டு எண் 48ல் உள்ள பொன்மலை ரயில்வே காலனியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் தேவையான இடங்களில் புதிய சாலை கள் அமைக்கவும், திருச்சி ரயில்வே கோட்டத்தின் தஞ்சாவூர் – திருச்சி பிரிவில் உள்ள திருவெறும்பூர் ரயில் நிலைய யார்டில் லெவல் கிராசிங்கை மீண்டும் திறப்பது அல்லது புதிதாக கீழ் பாலம் கட்டுவது, குமரேசபுரம் லெவல் கிராசிங்கில் கீழ் பாலம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளவும் வேண்டும்.
திருவெறும்பூர் தொகு திக்குட்பட்ட பகவதிபுரம், கூத்தப்பார், நடராஜபுரம், அரசங்குடி, பத்தாளப்பேட்டை, வெங்கூர், முருக்கூர், முள்ளக்குடி, குட்ஷெட் சாலை, வ.உ.சி. நகர் மற்றும் மார்க்கெட் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், எல்.சி. எண். 318 லெவல் கிராசிங்கை மீண் டும் திறக்க வேண்டும். இக்கோரிக்கைளில் குறிப்பிடப்பட்டுள்ள பல பணிகளும் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் உள்ளது என்பதால் சுரங்கப்பாதை அமைத்தல், சாலைகளை சீரமைத்தல், புதிய சாலைகள் அமைத் தல் ஆகியவற்றிலுள்ள சிக்கல்களை தீர்க்க ரயில்வே துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.