மயிலாடுதுறை மாவட்ட அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்
சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல்; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக, மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், ஏற்கெனவே நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல்; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாக ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிகள் நடைபெற்று வரும் விபரம் அறிந்தேன்.
இந்நிலையில், பூத் கமிட்டி அமைத்தல்; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகள் முறையாக நடைபெற்று வருகின்றனவா என்பதை மட்டும் மேற்பார்வையிடுவதற்காக, மாவட்ட வாரியாக கீழ்க்கண்டவாறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை திருஞானம்
கழக M.G.R. இளைஞர் அணி இணைச் செயலாளர் கோமல் R.K. அன்பரசன்
மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு நேரில் சென்று, தொகுதி வாரியாக நடைபெற்று வரும் பணிகளை மேற்பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும்.
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, பணியாற்றிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.