டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க அறிவுறுத்தல்

0 317
Stalin trichy visit

திருச்சி, நவ.1 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப் படுத்துவது தொடர்பாக மேயர் மு. அன்பழகன் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா, நகர்நல அலுவலர் மணிவண்ணன், மண்டல தலைவர்கள் துர்காதேவி, ஜெயா நிர்மலா மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அய்ந்து மண்டலங்களில் 65 வார்டுகளிலும் தலா 50 பேர் வீதம் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிர கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டும் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இக்கூட்டத்தில் மேயர் மு. அன்பழகன் கூறுகையில், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் மாநகராட்சிப் பணியாளாகள் ஒவ்வொரு நாளும் ஒரு வார்டுக்குளட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கொசுப் புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல், தேவையற்ற இடங்களில் சேகரமாகியுள்ள தண்ணீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா. கொசுப் புழுக்களை அழிக்கும் எண்ணெய் பந்துகளையும் கழிவுநீ செல்லும் ஓடைகளில் வீசி தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுகாதாரப் பணியாளாகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டிலோ, வீட்டின் சுற்றுப் புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த மண்பானைகள், பிளாஸ்டிக் குடங்கள், சிமென்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றில் தண்ணீ தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் தேக்கி வைத்துள்ள தண்ணீர் தொட்டிகளையும், பாத்திரங்களையும் நன்கு மூடி பராமரிக்க வேண்டும். நல்ல தண்ணீரில்தான் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் புழுக்கள் முட்டையிட்டு அபிவிருத்தியாகிறது. எனவே, ஏடிஎஸ் கொசுப் புழு வளராமல் அனைவரும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த இடத்திலும் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலான நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்கக் கூடாது. கொசுப்புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்கள் உள்ள தண்ணீ தொட்டி மற்றும் கொள்கலன்களில் உள்ள தண்ணீரை கீழே கொட்டி கொசுப்புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை உடனடியாக அழிக்க வேண்டும். தண்ணீ தொட்டி மற்றும் கொள்கலன்களை பிளீச்சிங் பவுடா, சுண்ணாம்பு கொண்டு சுத்தம் செய்து கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வீணான பொருள்களான பிளாஸ்டிக் டப்பா, டயர், உடைந்த குடங்கள் போன்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என தெவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.