தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்புப் பூஜை

0 383
Stalin trichy visit

 

திருச்சி, டிச.6 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சந்தைப்பேட்டையில் உள்ள இளமடிச்சி அம்மன் கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்ட தேமுதிக நிர்வாகிகள்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தேமுதிக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் விஜயகாந்தின் உடல் நலம் பூரண குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் ஆலோசனையின் படி லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ கே எஸ் கார்த்திக் தலைமையில் சந்தைப்பேட்டையில் உள்ள இளமடிச்சி அம்மன் கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.

இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், மாவட்ட நிர்வாகிகள் அவைத் தலைவர் லானா முருகேசன், துணைச் செயலாளர் மகாமணி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பூவாளூர் பேரூர் கழக செயலாளர் மணி, கேப்டன் மன்ற செயலாளர் சக்திவேல், ஒன்றிய நிர்வாகிகள் கருப்பையா, முருகானந்தம், அம்பேத்கார்,ராஜசேகர், இளையராஜா,செந்தில் ஊராட்சி கழக செயலாளர் செல்லதுரை, முருகானந்தம் அருண்குமார் பவித்திரன் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.