கணித பாடதை எளிய முறையில் நடத்திய பயிற்சி ஆசிரியர்

0 309
Stalin trichy visit

திருச்சி, டிச. 9  அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் கணித பாடங்களை படிப்பதிலும் தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதிலும் தடுமாற்றம் உள்ளது அந்த வகையில் கணிதம் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு பாடத்தை பயமின்றி எளிதாக படிக்க வைப்பது எப்படி என்பது குறித்து திருச்சி இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி ஆசிரியராக தேவி என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார் இவர் ஏற்கனவே திருச்சி ஹோலி கிராஸ் பள்ளியில் பயிற்சி ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருச்சி இ ஆர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எளிமையான முறையில் கணிதம் கற்பித்து, அன்றாட வாழ்க்கை தொடர்புள்ள முறையிலும் கணிதம் கற்பித்து, கணித திறனை படம் வரைந்து மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்குதல் போன்ற யுக்திகளை பயன்படுத்தி பயிற்சி ஆசிரியர் தேவி மாணவர்களிடையே சிறப்பாக பாடம் நடத்தி காட்டினார். மாணவர்களும் ஆர்வமுடன் கேட்டு கணிதம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமும் பெற்றனர்..

இதில் சிறப்பாக பாடம் நடத்திக் காட்டிய பயிற்சி ஆசிரியை தேவியை மூத்த கணித ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறிவியல் ஆசிரியர் சிவா ஆகியோர் பாராட்டினர்..

Leave A Reply

Your email address will not be published.