மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி, டிச. 28 தமிழ்நாடு அரசின் சேவைகள், பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர, ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை, அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் நேரடியாக மாவட்டங்களுக்கு சென்று, ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற முன்னெடுப்பின் கீழ், ஆய்வு கூட்டங்கள் நடத்தி, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள், குறிப்பிட்ட காலத்திற்குள், பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்து வருகிறார். திருச்சி திருவெறும்பூர் காட்டூர் முத்து மணி மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார், நிகழ்வின் போது மாநகரச் செயலாளர் மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.