சமயபுரம் கோவிலில் சிங்கப்பூர் வெளியுறுவுத்துறை அமைச்சர் சாமி தரிசனம்

0 200
Stalin trichy visit

திருச்சி,பிப்.19 சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிங்கப்பூரைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிங்கப்பூரைச் சேர்ந்த சட்டம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சண்முகம் சாமி தரிசனம் செய்தார்.

சிங்கப்பூரில் சட்டம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சண்முகம். விமானம் மூலம் திருச்சி வந்த அமைச்சர் சண்முகம் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய கோயிலுக்கு வருகை தந்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இதனைத் தொடர்ந்து ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்ற அமைச்சர் முதலில் கொடி மரத்தை வணங்கினார். பின்னர் மூலஸ்தானம் சென்ற அமைச்சர் அங்கு அம்மனை பயபக்தியுடன் வணங்கி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்த அமைச்சர் அங்குள்ள விநாயகர் மற்றும் உற்சவர் அம்மனை வணங்கினார்.பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அமைச்சரின் வருகை ஒட்டி சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.