ஆலம்பாக்கம் அரசுப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா

0 375
Stalin trichy visit

திருச்சி, பிப். 21  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா,இலக்கியமன்ற விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்லலிதா தலைமையில் நடைபெற்றது.

ஆலம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இந்நிலையில் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கியமன்ற விழா மற்றும் விளையாட்டு என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆலம்பாக்கம் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஜெனிபர் ஹென்றி பிரபா மற்றும் சமூக ஆர்வலர் கோமாக்குடி ஆசைத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டு பேச்சு,கவிதை,கட்டுரை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய பாராட்டினார். மேலும் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கினர்.முன்னதாக மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் வில்லியம், சோமசுந்தரம், பெரியசாமி, பிரகாஷ் மற்றும் கிராம பொது மக்கள், பெற்றோர்கள்,  ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.