மங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா
திருச்சி, பிப். 21 திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்துள்ள மங்கப்பட்டியில் 66 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா துவங்கியது.
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இவ்விழாவில் 650 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
திருவெறும்பூர் காவல்துறை கண்காணிப்பாளர். முசிறி வருவாய் உட்கோட்டாட்சியர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைத்தனர்
துறையூர் தாசில்தார் காவல்துறையினர் சுகாதாரத் துறையினர் கால்நடை துறையினர் தீயணைப்பு துறையினர் வருவாய் துறையினர் சீரமைப்பு பணிகளிலும் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன