அரசுப் பேருந்து மோதியதில் 3 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

0 322
Stalin trichy visit

திருச்சி, பிப். 27  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சத்திரப்பட்டியில் திருச்சி துறையூர் சாலையை கடக்க முயன்ற செம்மறி ஆடுகள் மீது நேற்று அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. 2ஆடுகள் காயமடைந்தன.

முசிறி தாலுகா உடையாம்பட்டி செல்லான்கடையை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன்  செல்லையா (38) .இவர் செம்மறி ஆடுகளை வளத்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆட்டுப்பட்டியில் இருந்து சுமார் 50 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.அதேபோல் துறையூர் தாலுகா பி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்த

ஞானசேகர்(48)  அரசு பேருந்தை ஓட்டிக்கொண்டு துறையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சத்திரப்பட்டி பகுதியில் உள்ள திருச்சி துறையூர் சாலையை செம்மறியாடுகள் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து செம்மறி ஆடுகள் மீது மோதி விபத்து உள்ளானது. இதில் மூன்று ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இரண்டு ஆடுகள் காயமடைத்தன.

இந்த விபத்து குறித்து புலிவலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.