திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 241
Stalin trichy visit

போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய விடியா திமுக அரசை கண்டித்து திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளார்.

டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அவரை தேடி வருகின்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் அதனை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அதிமுக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழக, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மகளிர் அணி மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில், திருச்சி மாவட்ட புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட மாணவரணி செயலாளர்கள் பொறியாளர் இப்ராம்ஷா, டி. அறிவழகன், அழகர்சாமி, மகளிர் அணி செயலாளர்கள் செல்வ மேரி ஜார்ஜ், நசீமா பாரிக், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர்கள் அருண் நேரு, சோனா விவேக், இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆமூர் சுரேஷ் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விடியா திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசியபோது :

விடியா திமுக அரசு செய்த ஒரே சாதனை தமிழகத்தை சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் தலைநகரமாக மாற்றியதுதான்,

ஒரு இடத்தில்2000 ம் கோடி ரூபாய்க்கு போதை பொருள் பிடித்தார்கள் என்றால் குறைந்தது 20 ஆயிரம் கோடிக்கு நெட்வொர்க் திமுகவுடன் ஜாபர் சாதிக் தலைமையில் 20 ஆயிரம் கோடிக்கு மேல் வரவு செலவு நடந்திருந்தால். சுமார் 2000 கோடிக்கு ஒரு இடத்தில் பிடிபட்டிருக்கும் இது தான் இந்த அரசு லட்சனம்.

தமிழகத்தில் மூன்று தினங்களுக்கு முன்னால்2000 கிலோ மதிப்புள்ள கஞ்சா பொருள் அகப்பட்டது இதுவரைக்கும் தமிழகத்தில் பத்திற்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு உடந்தையாக திமுக மாவட்ட செயலாளர் கொரியர் ஆஃபீஸ்க்கு கைது செய்ய போன போலீஸ் அதிகாரிகளே கையாளகாத ஸ்டாலின் அரசு அவர்களை அடித்து துரத்தி இருக்கிறார்கள் ரிப்போர்ட்டர் உட்பட.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது.

இந்த அரசு வந்த மூன்று ஆண்டு காலத்தில் மக்கள் விரோத நடவடிக்கைதான்.

எல்லா திட்டத்தையும் நிறுத்தியதுதான் இந்த அரசு செய்த சாதனை.

திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சர் செய்த பெரிய துரோகம் ஆட்சி வந்தவுடன் வரிவிதிப்பு,

சிறுபான்மையினருக்கு பெரிய துரோகம் செய்தது உதாரணமாக சொல்வதென்றால் திருச்சியில் தர்காவை இடித்துள்ளார்கள்,
கல்லறையை இடித்துள்ளார்கள்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள சிறிய வியாபாரிகளை கூட லைசன்ஸ் எடுக்க சொல்லி டார்ச்சர் செய்வது, எடுக்கவில்லை என்றால் பிளாஸ்டிக் பை வைத்திருக்கிறேன் என கேஸ் போடுவது,
இதுபோன்ற பல்வேறு துரோகங்கள் செய்கிறது இந்த அரசு,

இந்த அரசுக்கு வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டும் அளவிற்கு 40க்கு 40 வெற்றி அடைய பாடுபடுவோம் என்று பேசினார்.

மேடையில் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி பேசிய பொது:

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து அதிமுக தரப்பில் வைக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக அரசு அதைக் கண்டு கொள்ளாமல் இளைஞர்களை சீரழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டது. போதை பொருள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு உடன் திமுக குடும்பத்திற்கு நெருங்கி அதனால்தான் போதை பழக்கத்தையும் போதை பொருள் விற்பனையும் தடுக்க திமுக அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். திமுகவை வீழ்த்தி அதிமுக 40க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற மக்கள் உறுதியாக உள்ளனர் என பேசினார்.

தொடர்ந்து பா.குமார் பேசும்போது:

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ 3 ஆண்டுகள் முடிந்துவிட்டது ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலை தான் தமிழ்நாட்டில் நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டுமென அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்தாலும் அதை கண்டுகொள்ளாமல் திமுக அரசு செயல்பட்டது. மக்கள் மீது எந்த நலனும் காண்பிக்காமல், போதைப்பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும்
அரணாக திமுக அரசு இருக்கிறது.

தமிழ்நாட்டில் தண்ணீர் வரி, வீட்டு வரி, மின் கட்டணம், மதுபானம் விலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தி பொதுமக்களுக்கு இன்னல்களை கொடுத்தது திமுக அரசு.

தற்போது தமிழ்நாடு 3 லட்சம் கோடி கடனில் உள்ளது.

போதைப் பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளியான சாதிக் பாஷா, முதலில் ஜக்குபாய் படத்தின் சீடியை திருட்டுத்தனமாக விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது வெளிநாடுகளுக்கு குருவி போன்று பறந்து சில கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் அமீர் இயக்கிய ஆதி பகவன் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளராக இருந்தவர் திமுக மறைந்த எம்எல்ஏ ஜெ அன்பழகன் ஆவார். இவர் மூலமாக திமுகவின் முக்கிய நிர்வாகிக்கு சாதிக் பாஷா பழக்கமானார். பின்பு திமுக நிர்வாகியாக அப்போது இருந்த சிற்றரசு மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு நண்பராக சாதிக் பாஷா பழக்கமானார். பின்பு அதனைத் தொடர்ந்து திரை உலகம் சார்பாக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு போதை பொருட்களை விற்பனை செய்வதை தொடங்கினார்.

குறிப்பாக நட்சத்திர விருந்துகளில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் போதை பொருளை விற்பனை செய்யும் முக்கிய நபராக இவர் திகழ்ந்தார். அதுமட்டுமில்லாமல் லயோலா கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருளை சப்ளை செய்வதில் இருந்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்யும் வரைக்கும் தனது தொழிலை விரிவு படுத்தினார்.

இதற்கு உடந்தையாக உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், சேகர் பாபு, கனிமொழி, உள்ளிட்ட பலர் இருந்தனர்.

சாதிக் பாஷாவிடம் பணம் பெறாத திமுக நிர்வாகிகள் கிடையாது என குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராக உள்ளார்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதியிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

திமுக அரசு 2ஜி வழக்கில் ஊழல் செய்ததை மக்கள் எதிர்த்து அதிமுகவுக்கு வாக்களித்ததால் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தது.

அதேபோல் தற்போது போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களுடன் திமுக குடும்பங்கள் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் அனைவரும் தொடர்பில் உள்ளார்கள்.

போதை பொருட்கள் கடத்தியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் மேலும் வருகின்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களித்து அதிமுகவை மாபெரும் வெற்றி செய்ய மக்கள் தயாராக உள்ளார்கள்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி திமுகவிற்கும் பிஜேபிக்கும் தான், எந்த இடம் என்றால் இரண்டாவது மூன்றாவது இடத்திற்கு போட்டி.

ஆனால் அண்ணா திமுக முதல் இடத்தில் வரப்போகிறது.

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராக உள்ளார்கள் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.