ஆக்கிரமிப்புகள் அகற்றம் : வியாபாரிகள் சாலை மறியல்

0 341
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 5  திருச்சி மாவட்டம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர கடைகள்.போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பாதசாரிகள் நடப்பதற்கு இடையூறாக இருப்பதாக பல்வேறுகள் புகார்கள் வந்ததை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் மாநகராட்சி சார்பிலும் கடை உரிமையாளர்களுக்கு பலமுறை அறிவிப்பு கொடுத்தும் கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றாததால், இன்று மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சுப்ரமணியபுரம், ஏரிக்கரை சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள சாலையோர கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது,

இதனை கண்டித்து சாலையோர கடை வியாபாரிகள்,எந்த அறிவிப்பும் இன்றி கடைகளை அகற்றுவதாக கூறி திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர் இதனால் திருச்சி புதுக்கோட்டை சாலை பரபரப்பாக காணப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.