தனித்து போட்டி: நாயுடு நல சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்றத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தமிழ் நாடு நாயுடு நல சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ரெங்கராஜ் முடிவு!
திருச்சி, மார்ச் 6 திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று பெரம்பலூர் நாடாளுமன்ற சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தமிழ்நாடு நாயுடு நல சங்க கூட்டமைப்பு பொது செயலாளர் ரங்கராஜ் போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில் நேற்று வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அவர் பிரிந்து கிடக்கும் நாயுடு சமூகங்கள் ஒன்று சேர்ந்தால் 5 பாராளுமன்ற தொகுதியை நாம் பிடிக்கலாம் என்றும் தான் தனித்து போட்டியிடுவதாகவும் எந்த மாநில மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும் கூறினார். தனது நாயுடு நல சங்க கூட்டமைப்பு சார்பாக துறையூர் பகுதியில் ரயில் வழி தடத்தை விரைவில் கொண்டு வருவோம் என்று கூறினார்
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட நாயுடு நல சங்க தலைவர் ஜனார்த்தனன் பெரம்பலூர் மாவட்ட சங்கத் தலைவர் ராஜா உள்பட பல மாவட்ட நிர்வாகிகள் சங்க உறுப்பினர் திரளாக கலந்து கொண்டனர்