போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய ஆசிரியை கைது

0 315
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 6  திருச்சி மாவட்டம் முசிறியில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய  ஆசிரியையை  போலீஸார் நேற்று  கைது செய்தனர்.

முசிறியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஆசிரியை அறச்செல்வி என்பவரது மதிப்பெண் சான்றிதழ் போலியானது என கொடுத்த புகார் மனுவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் . ஆசிரியையாக பணிபுரிந்த அறச்செல்வியின் 12 ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பு சான்று அறிவதற்காக அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இணைய இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பியதில் பனிரெண்டாம் வகுப்பு மேல்நிலைத் தேர்வில் 1991, 1992 1993 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பருவ தேர்வுகள் எழுதி, அதில் உள்ள ஆறு பாடங்களில் அறச்செல்வி தோல்வி அடைந்துள்ளதாகவும், 6 பாடங்களில் போலியான மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்து, அதனை பயன்படுத்தி, ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர், 2001 முதல் முசிறி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து19,10. 2023 அன்று விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் போலியான மதிப்பெண் சான்றிதழ் ஆவணம் கொடுத்து, அரசு பணியில் ஆசிரியையாக புரிந்ததற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் முசிறி காவல் ஆய்வாளர் கதிரேசன் வழக்குப்பதிந்து அறச்செல்வியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.