திருமணமான காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

0 299
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9  திருச்சி மாவட்டம் சமயுரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு திருமணமான காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருளப்பன். இவரது மகன்  மரியடிலோமின்தாஸ் (26). இவர் ஐடிஐ முடித்துவிட்டு பெயிண்டிங் கான்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். இவரும் சமயபுரம் அருகே மகிழம்பாடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த  சுசீலாமேரி(23) என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் நேற்று இருவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களை பிரித்து விடுவார்கள் என அஞ்சிய காதல்ஜோடி சமயபுரம் காவல்
நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து சமயபுரம் போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். சுசீலாமேரி தனது காதல் கணவனுடன் தான் செல்வேன் என கூறியதைதொடர்ந்து போலீசார் அவரை மரிய டிலோமின்தாசுடன் அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.