முசிறியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி
திருச்சி, மார்ச் 14 முசிறியில் அரசு கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், முசிறி வருவாய்த்துறை முசிறி நகராட்சி முசிறி அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி இணைந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
முசிறி கைகாட்டியிலிருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை முசிறி நகராட்சி கமிஷனர் கிருஷ்ணவேணி துவக்கி வைத்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திக் ,முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் பொறுப்பு முருகராஜ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முசிறி கை காட்டில் இருந்து துவங்கிய பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பது நமது உரிமை, அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிக்க பணம் பெறக்கூடாது என விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். முசிறி கைகாட்டிகள் துவங்கிய பேரணி முசிறி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முடிவடைந்தது.
பேரணியில் சமூக ஆர்வலர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்