ஆலம்பாக்கம் புனித தோமையர் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

0 371
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி தாளாளர் அருட்தந்தை சகாயராஜ் தலைமையில்நடைபெற்றது .

ஆலம்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி,கட்டுரை போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ஆண்டு விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக அருட்தந்தை தன்ராஜ் கலந்து கொண்டு் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி புஷ்பா வரவேற்புரையாற்றி பள்ளியின் ஆண்டு அறிக்கை வாசித்தார். ஆசிரியர் கரோலின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்

இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் வாசு ,ஒன்றிய கவுன்சிலர் ஜெனிபர் ஜெனிவா ஹென்றி பிரபா.
ஊராட்சி மன்ற துணை தலைவர் வின்சென்ட்,வார்டு உறுப்பினர்கள் சேவியர் மற்றும் வில்லியம்
பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்  சோபியா, சோமு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஒன்றிய கவுன்சிலர் ஜெனிபர் ஜெனிவா ஹென்றி பிரபா. சார்பாக மரக்கன்றுகள்வழங்கப்பட்டது. இறுதியாகஆ சிரியர் டெய்சி அனுசுயாமேரி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.