நடிகை குஷ்புவை கண்டித்து தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

0 197
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 16  திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் திமுக மகளிர் அணி சார்பில் பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு உருவ பொம்மையினை எரித்து நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முசிறி நகராட்சி தலைவர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு வழங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அவதூறாக சித்தரித்து பேசிய குஷ்புவை கண்டித்து குஷ்புவின் உருவ படத்தை மகளிர் அணியினர் செருப்பால் அடித்தும்,  எரித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவக்குமார், நகர மகளிரணி துறை செயலாளர் ஜமுனா உள்ளிட்ட, ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.