கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்

0 209
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் ஆம்னி காரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவரின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(55). இவர் கடந்த 16 ம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவை காண ஆம்னி காரில் வந்துள்ளார்.அப்போது சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் ஆம்னி காரை நிறுத்திவிட்டு அதில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு தப்பிச் சென்றனர் பின்னர் செந்தில் எழுந்து பார்த்தபோது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சடைந்தார்.

பின்னர் இது குறித்து சமயபுரம் காவல்நிலையத்தில் செந்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.