துவரங்குறிச்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
துவரங்குறிச்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், துவரங்குறிச்சியில் பேரூர் கழக திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத் வழங்கினார். அருகில் பேரூர் நகர செயலாளர் மும்பை நாகராஜ், பேரூராட்சி தலைவர் சரண்யா, நகர துணைச் செயலாளர் ராஜா முகமது மற்றும் கட்சியினர் உள்ளனர்.