சமயபுரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு

0 392
Stalin trichy visit

திருச்சி, மே 3  திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவமனை அருகில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவமனை அருகில் முதியவர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவ அலுவலர் கௌதமன் முதியவரை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்திற்கு மருத்துவ அலுவலர் கௌதமன் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் இறந்து போன முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என பலவேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.