பாலக்கட்டையில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

0 268
Stalin trichy visit

திருச்சி, மே 9  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளத்தில் உள்ள பாலாஜி நகரில் மோட்டார் பைக்கில் சென்ற வாலிபர் பாலக்கட்டையில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தேவிமங்கலம் அக்கரைப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர்  கார்த்திகேயன் (35). இவர் தனது மோட்டார் பைக்கில் மண்ணச்சநல்லூர் அழகியமணவாளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அழகியமணவாளம் பாலாஜிநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாலகட்டையில் மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டார் என கூறினர். இந்த விபத்து குறித்து அவரது மனைவி கொடுத்த புகார் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.