நொச்சியத்தில் ஸ்ரீ சீதாராம கல்யாண மஹோத்ஸவம்
ஸ்ரீ ரங்கராஜபுரம் அக்ரஹாரம் பகுதியில் நடந்த ஸ்ரீ சீதாராம கல்யாண மஹோத்ஸவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருச்சி மண்ணச்சநல்லூர் நொச்சிய பகுதியில் உள்ள ஸ்ரீ ரங்கராஜபுரம் அக்ரஹாரம் ராஜகிரி கிரீன் அவென்யூவில் ஸ்ரீ ரங்கநாதர் நகர் பகுதியில் லோக ஹேமத்திற்காக ஸ்ரீ சீதாராம கல்யாண மஹோத்ஸவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருக்கல்யாண வைபவத்தில் வடக்குடி ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் பீடம் குருஜி ஸ்ரீ ஸ்ரீ அனுமான் தாஸ் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மணச்சநல்லூர் நொச்சியம் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். மேலும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்க ராயபுரம் அக்ரகாரத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.